வடிவேல் பாலாஜி வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (10:32 IST)
நேற்று மாரடைப்பால் மறைந்த நகைச்சுவை கலைஞர் வடிவேலு பாலாஜியின் வீட்டுக்கு நேரில் சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார்.  அவரது மறைவுக்கு அவரின் சக சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் சேதுபதி வடிவேலு பாலாஜியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்