"சரியாக கதை கேட்காமல் நடிக்க மறுத்த விஜய்" பின்னர் சூப்பர் ஹிட் ஆன படம் எது தெரியுமா?

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:16 IST)
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் ஒரு பில்லர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை பலரையும் திரும்பி பார்க்க செய்தார். 


 
தான் நடிக்கும் படங்களின் கதை தேர்வுகளில் விஜய் அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்து நடிப்பார். அந்தவகையில் எப்பேற்பட்ட இயக்குனராக இருந்தாலும் கதை திருப்திகரமாக இல்லையென்றால் அதனை நிராகரித்து விடுவார். 
 
அந்தவகையில் இயக்குனர் லிங்குசாமி பல வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னாராம். ஆனால், பாதி கதையை மட்டும் கேட்டுவிட்டு விஜய் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் இந்த கதையில் நடிகர் விஷால் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் சண்டகோழி. தற்போது இந்த விஷயத்தை இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்