வேற லெவல் ஓப்பனிங் பாடல் இருக்கு… தளபதி 68 படம் பற்றி பேசிய வைபவ்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (07:30 IST)
லியோ படத்தை முடித்த நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் இப்போது ஐதராபாத்தில் நடக்க, இன்னும் டோக்கியோ மற்றும் இஸ்தான்புல் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நடிகர் வைபவ் இப்போது இந்த படம் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “தளபதி 68 படத்தின் ஓப்பனிங் பாடலைக் கேட்டேன். யுவன் ஷங்கர் ராஜா வேற மாதிரி இசையமைத்திருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தின் டைட்டில் ஜனவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்