நடிகர் சூர்யா அளித்த நன்கொடை... நன்றி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்!!

Webdunia
திங்கள், 11 மே 2020 (18:27 IST)
மதுரை மாவட்டம் அன்னவாசல் திட்டத்துக்கு திரைப்பட நடிகர் சூர்யா ரூ.5  லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதற்கு மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  சு. வெங்கடேஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது :

நல்ல முன்னெடுப்புகள் நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்து கொண்டே நகரும். அன்னவாசலில் சோறூட்ட ரூ. 5 லட்சம் நன் கொடைளித்துள்ள நடிகர் சூர்யாவிற்கு நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவன் தந்து டுவிட்டர் பக்கத்தில், அகரம் மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றிவரும்திரைக்கலைஞர் சூர்யா, ஆகாரம் மூலம் அன்னவாசல் அன்ன வாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதர்களின்  பசியாற்றவும் முன்வந்துள்ளார் அவருக்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்