அழகி, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி, என குறைந்த பட்ஜெட்டில் தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் "களவாடிய பொழுதுகள்". அதன் பின்னர் எந்த ஒரு படமும் இயக்காத நிலையில் தற்போது "டக்கு முக்கு டிக்கு தாளம்" என்ற படத்தை இயக்கியுள்ளார்.