ஹீரோலா எதுக்கு..? சூரியை பாருங்க சும்மா கெத்து பண்றாரு!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:29 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இதற்கிடையில் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது உள்ளிட்டவரை தாண்டி வேலை இழந்து திண்டாடி வந்த திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க ஹீரோவையே அசால்ட்டாக மிஞ்சும் ஒரே காமெடி நடிகர் நம்ம சூரி தான் ஹீரோவாகவும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ் என அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர். சூரி தற்ப்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.           
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back to Gym

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்