'’பாம்பு விவகாரம்..’’. சிம்புவை நேரில் சந்தித்து சம்மன் ....வனத்துறை முடிவு

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:40 IST)
சிம்பு தனது தோளில் மீது பாம்பை வைத்துப் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல் இருந்தது, சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது. இதுதொடர்பாகநடிகர் சிம்பு, இயக்குநர் சுசீந்தரன்,  தயாரிப்பாளர் பாலாஜி காப்பா ஆகிய  மூவரையும்   நேரில் சந்தித்து வனத்துறையினர் நேரில் சம்மன் வழங்கவுள்ளனர்.
 
நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஈஸ்வரன்.இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
 
இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், சிம்பு தனது தோளில் மீது பாம்பை வைத்துப் பிடித்துக் கொண்டு நிற்பதுபோல் இருந்தது, சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.
 
இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் உயிருள்ள பாம்பை மரத்திலிருந்து பிடித்து சாக்குப் பையில் போடுவது போன்ற ஒரு காட்சி உள்ளதால் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது.
 
வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுக்காக்க வேண்டிய உயிரினங்களில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பாம்புகளும் உள்ளது. சிம்பு பிடித்துள்ள பாம்பு வன உயிரினப் பாம்பு சட்டத்தின் பட்டியல் 2ல் இடம்பெற்றுள்ளதால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ந் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமான பாம்பை இப்படி செய்வது குற்றம். சிம்பு மீது வன உயிரின ஆர்வலர்கள்  புகாரளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
 
மேலும்  இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் நடிகர் சிம்பு, இயக்குநர் சுசீந்தரன், தயாரிப்பாளர் பாலாஜி காப்பாவுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பினர்.
 
ஆனால் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்காமல் செய்தி அறிக்கை போன்று சுசீந்தரன் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் மூவரையும்  நேரில் சந்தித்து வனத்துறையினர் நேரில் சம்மன் வழங்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்