3 வயது சிங்கத்தை தத்தெடுத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன்

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (18:59 IST)
வண்டலூர்  உயிரியல் பூங்காவில்  ஷேரூ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது  மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காவில் அனு என்ற புலியைத் தத்தெடுத்தார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு, வண்டலூர் பூங்காவில்   மீண்டும் வெள்ளைப் புலியை தத்தெடுத்தார்.

இந்த நிலையில், தற்போது வண்டலூர்  உயிரியல் பூங்காவில்  ஷேரூ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

அவரது செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்