மாவீரன் படத்தின் புதிய அப்டேட்...

திங்கள், 29 மே 2023 (21:01 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
 

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில்,  சில நாட்களுக்கு முன் ரஜினியின் ஜெயிலர் படம் வரும் சுதந்திரதினத்தையொட்டி ஆகஸ்ட் 11 ஆம்தேதி வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனால்,  இதே தேதியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் மாவீரன்,  ஜெயிலர் படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் மாவீரன் படம் வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என்று இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்  தயாராகி வரும் மாவீரன் படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.

அதில், சிவகார்த்திகேயன் வீரமே ஜெயம் என்று டப்பிங் தொடங்கினார். இது வைரலாகி வருகிறது.

Marching ahead

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்