மகனுடன் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடிய நடிகர் சந்தானம் – இணையத்தில் பரவும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (10:20 IST)
நகைச்சுவை நடிகராக இருந்து இப்போது கதாநாயகனாக மாறியுள்ள நடிகர் சந்தானம் தனது மகனுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன் கதாநாயகனாக ப்ரோமோஷன் வாங்கியுள்ளார். ஆனால் இப்படி சென்ற நடிகர்களில் நீண்டகாலம் தாக்குப் பிடித்தவராக அவர் நீடித்து வருகிறார். கைவசம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ள அவர் இப்போது பிஸ்கோத் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகனுக்கு கிருஷ்ணன் வேடம் போட்டு அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சந்தானம் தன் மகனுடன் இருக்கும் முதல் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்