சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் கிங்ஸ்லி! வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் கிங்ஸ்லி! வைரல் புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இருக்கும் புகைப்படம் சற்று முன்னர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் காமெடி நடிகர் கிங்ஸ்லி மிக அபாரமாக நடித்து இருந்தார் என்பதும் அவரது கேரக்டர் அந்த படத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் ரஜினியுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் சினிமாவில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இன்னும் அதிக உயரத்துக்கு செல்ல வேண்டுமென ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்