வெங்கட்பிரபு- நாக சைதன்யா படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (15:38 IST)
நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான தேங்க் யூ ப்ளாப் ஆனதால் இந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க, ராம்கி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்