பிரபல நடிகர் ராஜசேகருக்கு கொரொனா உறுதி…சினிமா துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (16:52 IST)
சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனாவால் மூன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் கொரொனாப் பிடியில் சிக்கியுள்ளனர். இத்தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்  பிரபல விளையாட்டு வீரர்கள், பிரபல அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரையும் இத்தொற்று தாக்கியுள்ள நிலையில் தெலுங்கு நடிகர் ராஜசேகர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ராஜசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கும் எனது மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். குழந்தைகளுக்கு முற்றிலும் சரியாகிவிட்டது என்றாலும் நானும் மனைவியும் தற்போது பரவாயில்லை.விரைவில் மீண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்