’அசுரன்’ விழாவில் சர்ச்சை பேச்சு: விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்!

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (09:03 IST)
சமீபத்தில் நடந்த ’அசுரன்’ படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசிய நடிகர் பவன், தளபதி விஜய் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது
 
குருவி என்ற திரைப்படத்தின் 150வது நாள் விழாவில் தான் கலந்து கொண்டதாகவும் ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தனக்கு தெரியாது என்றும் ஆனால் ’அசுரன்’ திரைப்படம் உண்மையாகவே 100 நாள் ஓடிய திரைப்படம் என்றும் நடிகர் பவன் கூறினார்
 
இந்தப் பேச்சுக்கு சமாதானம் கூறும் வகையில் தனுஷ் பேசியிருந்தாலும் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இடையே கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் பவன் ’விஜய் அவர்களிடன்ம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவரை சிறுமைப்படுத்தும் வகையில் தான் என்றுமே நினைத்ததில்லை என்றும் இதற்காகத்தான் நான் பல விழாக்களில் பேசமாட்டேன் என்று என்னையும் அறியாமல் இதுபோன்று நான் பேசி விட்டதாகவும் கூறியுள்ளார். நடிகர் பவன் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்