அண்மையில் பிறந்த தன் குட்டி தேவதையின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:09 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில்  நடிகர் நகுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரது ஆசீர்வாதங்களை பெற்றார்.

இந்நிலையில் தற்போது தனது செல்ல மகளுக்கு  அகிரா ஸ்ருதி பேட்டர்பெட் (Akira Sruti Betarbet) என்று பெயர் வைத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதில் பேட்டர்பெட்  என்பது அவரது குடும்ப பெயராம். இதையடுத்து நகுலின் மகளை அனைவரும் ஆசீர்வதித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Say hello to our daughter - Akira Sruti Betarbet

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்