விமானத்தில் தொல்லைக் கொடுத்த நபர்… வெளுத்து வாங்கிய ராதிகா!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:08 IST)
நடிகை ராதிகா விமானம் ஒன்றில் தனக்கு தொல்லைக் கொடுத்த நபரை வெளுத்து வாங்கிய சம்பவத்தை மனோபாலா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியான நடிகையாக இருந்து வருபவர் ராதிகா. இவர் மிகவும் தைரியமான நபர் என்பது அவரின் ரசிகர்களுக்கும் தெரியும். இந்நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் மனோபாலா அவரின் தைரியத்தைப் பற்றி ஒரு சம்பவம் மூலம் சொல்லியுள்ளார்.

அதில் ‘நானும் ராதிகாவும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக விமானத்தில் சென்றோம். அப்போது ராதிகாவுக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர் அவரை கை கால்களில் தொட்டார். அப்போது ராதிகா தூங்கிக் கொண்டிருந்ததால் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் விமானம் தரையிரங்கியது அந்த நபரை கூப்பிட்டு வெளுத்து வாங்கிவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்