முதல் முறையாக வில்லனாக நடிக்கும் மாதவன்… எந்த நடிகர் படத்தில் தெரியுமா?

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (11:38 IST)
நடிகர் மாதவன் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

நடிகர் மாதவன் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவராலும் ரசிக்கப்பட்ட சாக்லேட் பாய் நடிகராக மாறினார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு,  இந்தி என பலமொழிப் படங்களில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான மார்க்கெட் இல்லாமல் போன போது இறுதிச் சுற்று படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதையடுத்து இப்போது நிசப்தம் மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் முதன் முதலாக முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் இப்போது அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்காக அவருக்கு மிக்கபெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். ஏற்கனவே ஆயுத எழுத்து திரைப்படத்தில் ஆண்டி ஹீரொவாக நடித்த மாதவன் அதன் பின்னர் இப்போது வில்லனாக நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்