மூளை அறுவை சிகிச்சைக்குப் பின் தனுஷ் பாடலுக்கு ஆட்டம் போட்ட லோகேஷ் பாப் – ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (10:12 IST)
நடிகரும் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளருமான லோகேஷ் பாப் மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் முதல் முறையாக தனுஷின் ரக்கிட ரக்கிட பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்க ஆஃப் த டே என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் லோகேஷ் பாப். அதன்  மூலம் அவருக்கு நானும் ரௌடிதான் படத்தில் வாய்ப்புக் கிடைக்க உடல் இயங்க முடியாத ஒரு ரௌடியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நண்பரும் நடிகருமான, குட்டி கோபி சமூக வலைதளத்தில் அவரது சிகிச்சைக்கு 7 லட்ச ரூபாய் தேவை என சொல்லி உதவிக் கேட்டு இருந்தார். இந்நிலையில் பலரும் அவரது சிகிச்சைக்கு உதவி செய்யவே, அதன் மூலம் முதல் கட்ட அறுவை சிகிச்சை நடந்தது. நடிகர் விஜய் சேதுபதி லோகேஷை நேரில் சென்று சந்தித்து உதவி செய்தார்.

இந்நிலையில் லோகேஷ்க்கு இப்போது இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதற்காக 6 லட்ச ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால் மீண்டும் நண்பர்கள் உதவி செய்ய வேண்டும் என குட்டி கோபி சமூகவலைதள பக்கத்தில் உதவி கோரியுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அதற்கான ரசீதைக் கூட காண்பிக்கிறோம் என கோபி தெரிவித்துள்ளார். அதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இப்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள ரக்கிட ரக்கிட பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் உடல்நலம் தேறி வந்தது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்