நடிகர் கிங்காங் மகனா இவர்? ரசிகர்கள் ஆச்சரியம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (20:19 IST)
நடிகர் கிங்காங் மகனா இவர்? ரசிகர்கள் ஆச்சரியம்!
பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் தனது மகனின் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து கிங்காங் மகனா? இவர் என அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் 
 
பாண்டியராஜன் இயக்கிய ’நெத்தியடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கிங்காங். இவருடைய உண்மையான பெயர் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி என்ற திரைப்படத்தில் தான் இவர் பிரபலம் ஆனார் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன்னர் கிங்காங் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகன் பெயர் துரைமுருகன் என்றும் அவருக்கு இன்று பிறந்தநாள் என்றும் அவருக்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்
 
கிங்காங் மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிங்காங் மகனா இவர் என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிங்காங்கிற்கு துரைமுருகன் போக மேலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்