முன்னணி நகைச்சுவை நடிகர் மரணம்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (17:09 IST)
தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கத்தி மகேஷ் மறைந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் விமர்சகராகவும் நகைச்சுவை நடிகராகவும் அறியப்படும் கத்தி மகேஷ் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தெலுங்கு சினிமாக்களில் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் கத்தி ரமேஷ். இவர் நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு விமர்சகராகவும் அறியப்படுபவர். இவர் செய்த விமர்சனங்களால் முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கும் இவருக்கும் சமூகவலைதளங்களில் வார்த்தை மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் இவர் சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி பலத்த காயமடைந்தார். அப்போல்லோ மருத்துவமனையில் ஜூன் 25 ஆம் தேதி அனுமதிக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்