’’மாமனிதன்’’ படத்தில் இளையராஜா பாடலை பாராட்டிய நடிகர் கார்த்தி..

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (17:37 IST)
மாமனிதன் பட முதல் சிங்கில் பாடலை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தென் மேற்குப் பருவக் காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர் கண்ணே கலைமானே, தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.

இப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்..

மாமனிதன் படத்தில் என் தந்தை மற்றும் எனது , விரைவில் மாமனிதன் படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியாகவுள்ளது..அது பெரும் விருந்தாக இருக்கும் என்று தெரிவித்த படி முதல் சிங்கிலை சமீபத்தில் வெளியிட்டார்.

யுவன்  இசையில் தட்டிப்புட்டா என்ற பாடலை அவரது தந்தை பாடியிருந்தார். இப்பாடல் டிரெண்டிங்கில் இடம் பிடித்ததுள்ளது.

யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா  இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள தட்டிப்புட்டா  என்ற பாடல் குறித்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ’’யுவன் இசையில் மீண்டும் ராஜா சார் பாடியுள்ளார். அறியாத வயது போன்று இப்பாடல் உள்ளது. கேட்பதற்கு என் மகிழ்ச்சியாக உள்ளது..மாமனிதன் படக்குழுவ்க்கு வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்