காத்திருந்தது போதும் என வில்லன் வேடத்துக்கு ஓக்கே சொன்ன பரத்… முத்தையா பட லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
திங்கள், 11 மார்ச் 2024 (07:19 IST)
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம்.  இந்த படம் கடந்த மாதம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரிகிடா சகா மற்றும் தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். முத்தையாவின் மற்ற படங்களைப் போலவே மதுரையைக் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பரத் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்