நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி

Sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (14:55 IST)
இந்தி சினிமாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்தி சினிமாவின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இப்பட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இப்படம் பற்றிய அப்டேட் அவரது கேரக்டர் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
 
இந்த  நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
81 வயதாகும் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது. அவர் விரைவில் பூரண குணமடைய ரசிகர்களும், சினிமாத்துறையினரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்