மம்தா பானர்ஜியின் நெற்றியில் வழிந்த ரத்தம்.. 3 தையல்.. என்ன நடந்தது?

Mahendran

வெள்ளி, 15 மார்ச் 2024 (12:42 IST)
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேற்று திடீரென காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டந்த வியாழக்கிழமை கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்ததாகவும் இதனை அடுத்து அவரது நெற்றி மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து நெற்றியில் ரத்தம் வழிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் நெற்றியில் மூன்று தையல்களும் மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டதாக தெரிகிறது. 
 
இதை அடுத்து சிறிது நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது 
 
மம்தா பானர்ஜியின் நெற்றியில் வழியும் ரத்தத்துடன் கூடிய புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்து தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது., 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்