விஜய் பற்றி பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை...புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (19:11 IST)
‘’நடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பட் நடவடிக்கை எடுக்கப்படும் ‘’என்று விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்,2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது….மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்து…தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது. கூட்டணி கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி''. என்று மதுரை தெற்கு மாவட்ட  கொள்கை பரப்பு தலைமை தளபதி  மக்கள் இயக்கத்தினர்  குறிப்பிட்டிருந்தனர்.
 
இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

‘’நடிகர் விஜய் சம்பந்தமாக பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பட் நடவடிக்கை எடுக்கப்படும் ‘’என்று விஜய் மக்கள் இயகத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

‘’ரூ.150 க்கு எடிட் செய்து  பொய்யான தகவல்கள் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் விஜய் விஜய்யயின் பெயர்க்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… இந்த மாதிரியான ஒரு பொறுப்பே இல்லை. இதற்கும் மக்கள் இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லை ‘’ என்று கூறி எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்