ஆராத்து ஆனந்தி கேரக்டரில் நடிக்கும் மலர் டீச்சர்

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (19:50 IST)
சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கேரக்டர் இன்னும் பலரின் கண்ணுக்குள்ளே இருக்கும். இந்த ஒரு படம் அவரை தென்னிந்திய அளவில் புகழை பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது சாய்பல்லவி தனுஷின் 'மாரி 2' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சாய்பல்லவி ஒரு தரலோக்கல் கேரக்டரில் நடித்து வருவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவருடைய கேரக்டர் பெயர் 'ஆராத்து ஆனந்தி' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தரலோக்கல் லெவலில் இறங்கி அடிக்கும் சாய்பல்லவிக்கு இந்த படம் வெளியானதும் நிச்சயம் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்