மீண்டும் திருமணமா?... பாலிவுட் நடிகர் அமீர் கான் அளித்த பதில்!

vinoth
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (10:38 IST)
கடந்த ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார். இந்நிலையில் அமீர்கான் தன்னுடன் தங்கல் படத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக் என்கிற நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களின் காதலால்தான் அமீர்கானின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சினை  உருவாகி  விவாகரத்து வரை சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த திருமணச் செய்தியை பாத்திமா சனா மறுத்தார்.

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது அமீர்கான் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகை ரியா சக்ரோபோர்ட்டியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களைப் பேசினார். அப்போது அவர் திருமண வாழ்க்கைக் குறித்து பேசும்போது “நான் இரண்டு முறை விவாகரத்துப் பெற்றவன். அதனால் என்னிடம் திருமண வாழ்க்கைக் குறித்து அறிவுரைக் கேட்காதீர்கள். எல்லோருக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. என் முன்னாள் மனைவிகளோடு நான் இன்னும் நல்ல உறவில்தான் உள்ளேன். நாங்கள் ஒரு குடும்பம் போல இன்றும் பயணிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அடுத்த திருமணம் செய்துகொள்வது பற்றி பேசிய அவர் “எனக்கு இப்போது 59 வயது ஆகிறது. அதனால் என்னால் இன்னொரு திருமணம் பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை.  நான் என் குடும்பம் மற்றும் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்