பாகுபலி படத்தை பார்க்காத தங்கல் நாயகன்!!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (14:00 IST)
பாகுபலி மற்றும் தங்கல் ஆகிய இரு படங்களுக்கு கசும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், நான் இன்னும் பாகுபலி படத்தை பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார் ஆமிர்கான்.


 
 
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் தங்கல். இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்தது. ரூ.700 கோடியை வசூலித்தது. இந்த சாதனையை ராஜமௌலியின் பாகுபலி படம் முறியடித்து. 
 
தற்போது தங்கல் படம் சீனாவில் வெளியாகி அங்கேயும் வசூல் சாதனை தொடர்கிறது. இதன் மூலம் பாகுபலியின் வசூல் சாதனையை நெருங்கிக் கொண்டுள்ளது தங்கல். 
 
இந்நிலையில், பாகுபலி 2 படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளது. எனவே பாகுபலியுடன் தங்கலை தொடர்ந்து ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். 
 
இது பற்றி ஆமீர்கான் பேசுகையில், தங்கல் மற்றும் பாகுபலி- 2 ஆகிய இரண்டு படங்களும் நாட்டிற்கு பெருமை சேர்த்த நல்ல படங்கள். ஆனால், நான் இன்னும் பாகுபலி-2 பார்க்கவில்லை. இரண்டு படமும் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டது. எனவே, இரண்டு படத்தையும் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்