பொய் சொல்லி கூப்பிட்டு போய் தாலி கட்டிடாரு - திருமண ரகசியத்தை உடைத்த ஆல்யா!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (16:44 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 
 
இந்நிலையில் முதன்முறையாக தங்களது திருமண ரகசியத்தை பகிர்ந்துள்ள ஆல்யா மனசா ஜோடி, "  ராஜா-ராணி சீரியல் முடியும் தருவாயில் இருந்ததால் இனியும் அமைதியாக இருப்பது நல்லதல்ல என யோசித்து ஆல்யாவின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்க அழைத்து சென்ற சஞ்சீவ் அங்கேயே தாலி கட்டியதாக ஆல்யா வெட்கத்தில் கூறி நகைத்தார். இது அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்