இப்படி ஒரு கேவலமான படம் தேவையா சிம்பு?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (22:35 IST)
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று சிலபல குழப்பங்களுக்கு பின்னர் வெளியாகியது. முதல் காட்சி முடிந்ததுமே வழக்கம்போல் விமர்சனம் வரத்தொடங்கிவிட்ட நிலையில் அடுத்த காட்சிக்கு படுவேகமாக கூட்டம் குறைந்தது.



 


அப்படி என்னதான் ரிசல்ட் வந்ததாம். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் எடுத்த பேட்டியில் 'படம் பார்த்த முக்கால்வாசிப்பேர் சொன்னது படம் கேவலமாக இருந்தது என்பதுதான்.

டுவிட்டரில் காசு வாங்கிக்கொண்டு ஜால்ரா போடுபவர்கள் மட்டும் 3 மார்க் 3.5 மார்க் கொடுத்து தங்கள் விசுவாசத்தை காட்டியுள்ளனர். மீதி அனைவரும் வச்சு செஞ்சதால் அனேகமாக இந்த வார இறுதியிலேயே படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு உங்கள் மீது ரொம்ப மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கின்றோம், இப்படி ஒரு கேவலமான படம் உங்களுக்கு தேவையா? என்று ஒரு சிம்பு ரசிகர் நிஜமாகவே மனம் நொந்து வீடியோவில் பேசியது தான் பரிதாபத்தின் உச்சம்
அடுத்த கட்டுரையில்