சிவகங்கையில் யாழினி திரையரங்கில் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாய பெரு உலகம் என்ற குறும்படம் இன்று வெளியிடப்பட்டது.
வேல்முருகன் செல்லையா இயக்கத்தில் வெங்கடேஷ் ராமதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள மாயப் பெரு உலகம் என்ற குறும் படத்தை தொழிலதிபர்கள் பாண்டிவேல் பொறியாளர் ராமதாஸ், மற்றும் சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் பாலகார்த்திகேயன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
நண்பர்களால் குறும்படம் தயாரிக்கப்பட்டு அதை திரையரங்கில் வெளியிட்டனர்.
ஓடிடி யிலும் வெளியிட உள்ளனர். டிஜிட்டல் இந்தியா என நாடு உருவாகி பண பரிவர்த்தனைகள் எல்லாம் க்யூஆர் கோடு மூலமாக நடைபெற்று வருவதை போல்
க்யூஆர் கோடு -யை பயன்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த குரும்படத்தில் கதை அம்சத்தை உருவாக்கியுள்ளார்கள்.
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாகவும் பாலியல் சீண்டல்கள் அதிகரிக்க whatsapp facebook instagram போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் உள்ளது அதேபோல் பாதுகாப்பு இல்லாமல் எங்கும் சென்று விட்டாலும் அவர்களை கண்டுபிடிக்க க்யூஆர் கோடு உடலிலே Tatto பதிவிட்டு எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்கலாம்.
என்பதையும் இந்த குறும்படத்தின் வாயிலாக வலியுறுத்தியுள்ளனர். டாட்டூ மூலமாக பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி ஏற்படுத்தலாம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்கள் .சினிமா தியேட்டரில் குறும்படம் வெளியிடப்பட்டது நகரின் முக்கிய பிரமுகர்களும் நண்பர்களும் பொதுமக்களும் கண்டு களித்தனர்.