சல்மான் கானை காதலித்தது என் வாழ்க்கையில் மோசமான காலம் என அவரது முன்னாள் காதலி சோமி அலி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளாக முன்னணி நடிகராக கோலோட்சி வருபவர் சல்மான் கான்.
உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இது தவிர இவர் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இவர், பல நடிகைகளைக் காதலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதில், முன்னாள் நடிகை சோமி அலியும் ஒருவர்.
இவர், தற்போது பெண்களுக்கு ஆதரவான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கானுடனான தன் காதல் அனுபவத்தை அவர் தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதில், சல்மான் கானை காதலித்த 8 வருடகாலம் என் வாழ்க்கையில் துன்பமான காலம்; அவர் எனை அவமானப் படுத்தியதாகவும், சமீபத்தில், தன் இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது தாயுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.