அதிக வசூல் செய்த படங்களில் 4 வது இடம் - ஆதிபுரூஸ் படம் புதிய சாதனை

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (21:44 IST)
ஆதிபுரூஸ் படம்  வெளியான முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளார்.

இப்படம் ரூ. 600 பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக  நேற்று இப்படம்  வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ஆதிபுரூஸ் படம்  நேற்று வெளியான ஒரே நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில்,  வெளியான முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஆதிபுரூஷ் படம் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏற்கனவே ஆதிபுரூஸ் படம் டிஜிட்டல், மியூசிக் வெளீயீட்டு உரிமை ஆகியவை மூலம் ரூ.247 கோடி வசூலீட்டியதாக பாலிவுட் ஹங்கமா கூறியது.

இந்த நிலையில்,  நேற்று வெளியான முதல் நாளில் ஆந்திராவில் ரூ.39 கோடியும், கர் நாடகாவில் ரூ.6.50 கோடியும், தமிழகம் மற்றும் கேரளாவில் ரூ.2 கோடியும் இந்தியாவில் மற்ற பகுதிகளில் ரூ.40.50 கோடி என இந்தியாவில் மட்டும்  முதல் நாளில் ரூ.88 கோடி வசூல் குவித்துள்ளது.

வெளிநாட்டில் ரூ.140 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, இதுவரை இந்தியாவில் வசூல் செய்த படங்களின் வரிசையில் ஆதிபுரூஸ் 4 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்