கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (18:57 IST)
நடிகர் கார்த்தி நடித்து வரும் ‘சர்தார் 2’ படத்தின் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தயாரிப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
 
2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், அதற்கான பூஜை நிகழ்வு நடைபெற்றது. தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்சர்ஸ், பூஜை தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இதில், கார்த்தி டப்பிங் செய்யும் காட்சிகள் மற்றும் பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
இதேவேளை, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், டப்பிங் பணிகளும் தொடங்கியதால், இன்னும் சில மாதங்களில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
‘சர்தார் 2’ படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், பாபு அந்தோணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பை யுவன் சங்கர் ராஜா கவனிக்கின்றார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்