தெருச்சண்டைக்கு தயாராகும் லட்சுமி மேனன்

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (11:09 IST)
சிவ கார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் அவருடன் நடிக்க லட்சுமி மேனனிடம் கால்ஷீட் கேட்க உள்ளனர்.
சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் மீண்டும் சிவ கார்த்திகேயனை இயக்குகிறார். ரஜினி முருகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. சமுத்திரகனி முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார். படத்தின் வில்லன் இவர்தான் என்கின்றன செய்திகள்.
இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயனுடன் சமந்தா நடிப்பார் என சென்ற வாரம் வதந்தி கிளம்பியது. ஆனால் சமந்தா நடிக்கவில்லை. அவருக்குப் பதில் லட்சுமி மேனனினடம் கால்ஷீட் கேட்க உள்ளனர். கதைப்படி ஹீரோயின் கதாபாத்திரம் தெருச்சண்டை போடுவதில் கில்லாடி. அதற்கு சமந்தாவைவிட லட்சுமி மேனனே பொருத்தமாக இருப்பார் என இந்த முடிவை எடுத்துள்ளனர்.