பலாப்பழச் சுளைகளை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள நெய் சேர்த்து சூடானதும் பலாப்பல சுளைகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
அது நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கூழாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அதே கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள பலாப்பல சுளை, சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும்.
சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பலாப்பழ அல்வா ரெடி. சூடு ஆறியதும் பரிமாறவும்.