அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் கொத்தமல்லிதழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி தயார்.