மிகவும் எளிதாக மைதா பிஸ்கட் செய்வது எப்படி...?

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (13:15 IST)
தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - முக்கால் கிண்ணம்
மைதா - தேவையான அளவு அல்லது கோதுமை மாவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - சுவைக்காக



செய்முறை:

சர்க்கரை, நெய், உப்பு சுவைக்காக சிறிதளவு எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கலக்கவும். இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் பிசைந்த மாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும். கத்தி கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மிகவும் எளிதான மற்றும் சுவையான மைதா பிஸ்கட் தயார். குறைந்த நேரத்திலேயே இந்த பலகாரத்தையும் செய்துவிடலாம்.

குறிப்பு:  தேவைக்கு ஏற்ப பால் 1 கிண்ணம் சேர்த்து பிசைந்து செய்வதால் மிகவும் மிருதுவாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்