பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போடவும். சுவையான பாதாம் பர்ஃபி தயார்.