கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: இலங்கை தமிழர் பகுதியில் பரபரப்பு

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2016 (15:02 IST)
இலங்கை தமிழர் பகுதியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், 4 மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டன.


 

 
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
பண்டாரி குளத்தைச் சேர்ந்த ஹரிஸ்னா என்ற அந்த மாணவி தனத வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
 
அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். தமிழர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈபட்டனர். அப்போது, காவல்துறை அதிகாரத்தை முழுமையாக மாகாண அரசுக்கு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினல்.
 
இதைத் தொடர்ந்து, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
எனவே, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை ஓடவில்லை. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.