பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி

செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (10:09 IST)
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றில் பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் ஆக்லாந்து அணியை தோற்கடித்தது.

வரு‌‌ம் 23ஆ‌மதேத‌ி நடைபெஉ‌ள்சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி‌யி‌ல் 3 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நேற்‌றிரவு தொடங்கியது.

2வது லீக் ஆட்டத்தில் காலிஸ் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கேரெத் ஹாப்கின்ஸ் தலைமையிலான ஆக்லாந்து (நியூ‌ஸிலாந்து) அணியை எதிர்கொண்டது.

பூவா தலையா வெ‌ன்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மன்விந்தர் பிஸ்லா, காலிஸ் ஆகியோர் களம் இறங்கினர். பிஸ்லா 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அதிரடி ஆட்டக்காரர் யூசுப் ப‌த்தான் 17 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்னுடன் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீரர்கள் ரன் அடிக்க முடியாமல் திணறியதுடன், சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள். மனோஜ் திவாரி 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. ரஜத் பாட்டியா 10 ரன்னுடனும், கோஸ்வாமி 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆக்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்னே எடுத்தது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வின்சென்ட் 40 ரன் எடுத்தார்.

கடைசி ஓவரில் ஆக்லாந்து அணி வெற்றிக்கு 6 பந்துகளில் 11 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிரெட்லீ வீசினார். கடைசி ஓவரில் ஆக்லாந்து அணி 8 ரன்னே எடுத்தது. கடைசி பந்தில் 4 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்ததால் பரபரப்பு நிலவியது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் தான் எடுக்க முடிந்தது.

கொல்கத்தா அணியில் ூசுப் ப‌த்தான் 2 விக்கெட்டும், ரஜத் பாட்டியா, காலிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்