இவர்கள் மூன்று பேரால் அதைச் செய்யமுடியும் – யுவ்ராஜ் சிங் கருத்து !

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:25 IST)
யுவ்ராஜ் சிங்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் யுவ்ராஜ் சிங் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று வீரர்களால் இரட்டைச் சதம் அடிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவ்ராஜ் சிங் தனது அதிரடி ஆட்டத்தால் 12 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேக சாதனையைப் படைத்தவர். தற்போது சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகியுள்ள அவர் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

அவரிடம் டி 20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கபட்ட வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்க பட்டபோது ‘டிவில்லியர்ஸ், கெய்ல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அந்த வாய்ப்பு உள்ளது’ என அவர் சொல்லியுள்ளார்.

சர்வதேச டி 20 போட்டிகளில் இது வரையிலான தனிநபர் அதிகபட்ச சாதனையை ஆரோன் பின்ச் கைவசம் வைத்துள்ளார். அவர் 172 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்