சென்னையில் சுந்தர் கண்டிப்பாக சதமடிப்பார்… தந்தை உறுதி!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (10:30 IST)
சென்னையில் இன்று தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக சதமடிப்பார் என அவரின் தந்தை கூறியுள்ளார்.

ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார். 3 விக்கெட்களைக் கைப்பற்றிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். அப்போதே அவர் தந்தை தன் மகன் சதமடிக்காதது ஏமாற்றம் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் கண்டிப்பாக அவர் சதமடிப்பார் என அவர் தந்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் ‘சுந்தர் முதல் ரஞ்சி கோப்பை சதத்தை சேப்பாக்கத்தில்தான் பதிவு செய்தார். அதுபோல முதல் சர்வதேச சதத்தையும் அவர் இங்கே அடிப்பார்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்