ரூ.1 கோடி மதிப்பு பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்த சச்சின்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (04:47 IST)
இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சின் தெண்டுல்கர், தன்னுடைய சக ஆட்டக்காரரும், இந்தியாவின் ஒரே அதிரடி விளையாட்டு வீரருமான சேவாக்கிற்கு ரூ.1.14 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளார்.



 
 
இந்த பரிசை பெற்றுக்கொண்ட சேவாக், சச்சினை புகழ்ந்து தள்ளியுள்ளார். “நன்றி சச்சின் கடவுளே மற்றும் BMW. உங்கள் பரிசுக்கு நன்றி.” என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
உலகின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்கார ஜோடிகளில் ஒன்று கூறப்படும் சச்சின் - சேவாக் கூட்டணி பல சாதனைகள் செய்திருந்த நிலையில் இருவரும் கிரிகெக்ட்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் தங்கள் நட்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது இந்த பரிசில் இருந்து தெரியவருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்