’ஐசிசி டெஸ்ட்’ தரவரிசையில் முதலிடம் பிடித்த ’விராட் கோலி’...

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (16:51 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள பேட்ஸ் மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில்  இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த,  வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரில்  விளையாடிய விராட் கோலி, 136 ரன்கள் எடுத்தார். அதனால், அவர் டெஸ்ஸ் தரவரிசையில் 928 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார்.
 
ஏற்கனெவே முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் 923 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய கிரிக்கெட் பேட்ஸ் மேன் ரஹானே ஒரு இடம் சரிந்து ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்