விஜய் ஹசாரே கோப்பை: மழையால் கோப்பையை இழந்த தமிழ்நாடு அணி

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (20:34 IST)
விஜய் ஹசாரே கோப்பை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனை அடுத்து இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது 
 
கோப்பையை வெல்பவர் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இது என்பதால் இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர். இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. தமிழக அணியின் முகுந்து 85 ரன்களும் அபராஜித் 66 ரன்கள் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 253 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடக அணி, 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 146 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. இதன் பின் சில நிமிடங்கள் கழித்தும் மழை நீடித்ததாலும் போதுமான வெளிச்சம் இல்லாததாலும் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது 
 
23 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்த கர்நாடக அணி 87 ரன்கள் எடுத்திருந்தாலே வெற்றி என்று கணிக்கப்பட்டது. இதனையடுத்து கர்நாடக அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டி முழுமையாக நடந்திருந்தால் தமிழக அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்தும் அந்த வெற்றி வாய்ப்பை மழை பறித்து விட்டதாகவே ரசிகர்கள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்