காணாமல் போன மழை, திரும்ப வருமா? வெதர் ரிபோர்ட்!!

புதன், 23 அக்டோபர் 2019 (16:42 IST)
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ஆனால், இன்று பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையே பெய்தது. 
 
தற்போது தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரைக்கு தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்திருக்கிறது. இது ஒன்று மேலும் தீவிரமடைந்து வடக்கு, வடமேற்கு திடையில் ஆந்திராவை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
ஆம், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்