தோனியின் மண்ணில் மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் செய்யுமா இந்தியா ?

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (08:50 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா டி 20 தொடரை சமன் செய்துள்ளது. அடுத்ததாக நடந்த டெஸ்ட் தொடரில் முதலில் நடந்த 2 டெஸ்ட்களையும் தோற்று தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்றவாது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டியை வென்று 3-0 என்ற கணக்கில் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்தியா. தோனியின் ஊரான ராஞ்சியில் நடக்கும் இந்த போட்டியைக் காண தோனி வர இருப்பதால் மைதானத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்