ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்.
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.