டெஸ்ட் தரவரிசை வெளியீடு – கோஹ்லியை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித் !

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (15:39 IST)
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதல் இடத்தி, உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் முதல் இடத்தில் உள்ளார். 910 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தில் இருக்க 904 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் அவரை நெருங்கிக் கொண்டுள்ளார்.

கேன் வில்லியம்ஸன், சத்தீஸ்வர் புஜாரா, ஹென்றி, கருணாரத்னே, ஜோ ரூட்,  டாம் லாதம், மார்க்ரம்,  டீ காக் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். அதுபோல பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பூம்ரா 774 புள்ளிகள் பெற்று முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளார். அவர் 7 ஆவது இடத்தில் உள்ளார். இது பூம்ராவின் சிறந்த தரவரிசையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்